இலங்கையிலிருந்து தமிழகத்தை குறி வைக்கிறதா சீனா உளவுப்படை?

by Rameshraj 2010-06-19 18:16:41

இந்தியாவின் எதிரி நாடான சீனா, நமது தேசப்பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தமிழகத்திற்கு அருகே இப்போது தொடங்கிவிட்டது. சீனாவின் வர்த்தகம் மற்றும் கடல் வணிக ஒப்பந்தங்களை வேறு சில நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலமாக தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி ஒரு மர்ம வலை பின்னலை சீனா உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் கட்டுமானத் திட்டங்களையும் துறைமுக வசதிகளையும் மேம்படுத்துவதாகக் கூறிகொண்டு, இந்தியாவிற்கு சொந்தமான கடற் பிராந்தியத்தை சீனா தந்திரமான முறையில் இப்போது ஆக்கிரமிகிறது. ஆனால் இந்திய அரசு, இலங்கையிடம் காட்டும் அதே மென்மையான போக்கை, சீனா விஷயத்திலும் தொடர்கிறது. அமெரிக்காவில் அதிபர் புஷ் ஆட்சியிலிருந்த காலத்தில், இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் சீனா ஏற்படுத்திய ஒவ்வொரு செயல் திட்டத்தையும் ஒரு �முத்து� என்றும், சீனா இந்த முத்துக்களைக் கோர்த்து ஒரு வலைப் பின்னலை ஏற்படுத்த முனைகிறது என்றும் அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் அப்போது கூறினர். இதை சீனாவின் முத்துமாலை� என்று அமேரிக்கா அந்தக்காலத்திலேயே வர்ணித்தது. �மறைமுகமான ராஜ தந்திரத்தின் ஒரு பகுதி தான் இந்த �முத்துமாலை திட்டம்�. இந்தியாவை சுற்றி சிலந்தி வலை போன்ற வலைப் பின்னலைப் பின்னுவதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கடி நிலை தோன்றும். அப்போது இந்தியாவை இந்த வலைக்குள் சிக்க வைப்பதை இலக்காகக் கொண்டதே சீனாவின் தந்திரம்� என்று ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியர் ஜீன்பிரி காபெச்டன் தெரிவித்து உள்ளார்.


ஆனால், சீனாவிற்குத் தேவையான பெட்ரோலிய எண்ணெயை கப்பலில் கொண்டு செல்லும் பிரதான பாதையாக இந்துமகா சமுத்திரம் இருந்து வருகிறது. இந்த நிலையில், தெற்காசியப் பிராந்தியத்தில் மோதல் நிலை உருவானால் இந்தியாவினைச் சுற்றி உள்ள அண்டை நாடுகளில் விரிவாக்கம் செய்துவரும் துறைமுகங்களை சீனா தனது ராணுவத் தேவைக்கு நிச்சயமாக பயன்படுத்தும். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கவ்தர் நகரில் சீனா நிதியுதவியோடு மேற்கொள்ளப்படும் துறைமுக கட்டுமானம், இந்தியாவிற்கு ஏற்கனவே அதிர்ச்சியை தந்தது. பர்மாவின் சிட்டவே , மேர்குய் மற்றும் டவெய் ஆகிய பகுதிகளில் சீனாதான் துறைமுக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை பிரம்மாண்ட அளவில் மேம்படுத்தும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது. மேலும் இலங்கையில் சீனா, .வேறுபல திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. இந்த பணிக்கான செலவில் 85 சதவிகிதத்தை சீனாவின் ஏசிம் வங்கியே வழங்கியது. இலங்கைக்கு மானியமாக ஒரு பில்லியன் டாலரை சீனா வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கான போருக்கும், சீனா நவீன ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கியது. பங்களாதேசின் சிட்டகாங் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் துறைமுகத்தினை ஆழமான துறைமுகமாக நவீனப்படுத்துவதிலும் சீனா தனது பங்கை செய்திருக்கிறது. சீனாவின் �முத்துமாலைத் திட்டத்தில் இறுதியாக இணைத்த முத்தாக நேபாளம் இப்போது மாறிவிட்டது. நேபாளம் நான்கு புறமும் தரையால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் சீனாவைப் பொறுத்த வரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நேபாளம் அமைந்திருக்கிறது.


�இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்க மேலாண்மை செய்ய சீனா முனைகிறது என்ற அச்சம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் ஆழமாகவே ஏற்பட்டுள்ளது. �ஆப்பிரிக்காவிலோ அல்லது மத்திய கிழக்கிலோ போர் அல்லது அவசரகால நிலைமை உருவாகி, அங்கிருக்கும் சீன மக்களை மீட்கும் பணிக்கு சீனக் கடற்படை , இந்துமகா சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனா மேம்படுத்தும் துறைமுகங்களை தளமாக பயன்படுத்தும். இந்தியா-சீனா திடிரென இடையே போர்மூண்டால், அப்போது இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து, தமிழகம் மீது சீனா கடற்படை குண்டுகளை வீசக்கூடும். இதுவரை நடந்த இந்தியா- சீனா போரின்போது இரு நாட்டு எல்லையில் இமயமலையில்தான் பீரங்கிகள் வெடிக்கும். இனிமேல் இலங்கையிலி ருந்து கொண்டு சீனா கடற்படை வீசும் பீரங்கி குண்டுகள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மீது விழுந்து பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தலாம்--சிறப்பு செய்தியாளர் மண்டபம் விஸ்வநாதன்

Tagged in:

1622
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments