அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார்
by Rameshraj[ Edit ] 2010-06-19 18:20:13
அமெரிக்கா சென்றிருந்தபோது அதிபர் ஒபாமாவை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார். கடந்த வாரம் அவருடன் டெலிபோனில் பேசியபோது இதை உறுதி செய்தேன். இந்தியா பாரம்பரிய கலாசாரம் கொண்ட நாடு. எனவே இந்தியா செல்வதை பெருமையாக கருதுகிறேன்.
உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. எனவே இந்தியாவுடன் ஆன உறவு இன்றியமையாதது. ஆகவே எனது அரசில் அங்கம் வகிக் கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனது தனிப்பட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்தியாவுடன் ஆன உறவு முக்கியத்தும் வாய்ந்தது. உலக அளவில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், நிதி மூலதனம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்றவற்றில் ஒன்றி ணைந்து செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.