Hollywood - கோடம்பாக்கம் - சென்னை - தமிழ்நாடு
by Nirmala[ Edit ] 2009-11-10 16:54:51
கோடம்பாக்கம் சென்னையின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே தமிழ் திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும். தமிழ் திறையுலகின் பல பிரபலங்கள் இங்கு தான் வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோடம்பாக்கத்தின் அருகில் தான் உள்ளன.
தியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூலைமேடு, அஷோக் நகர் மற்றும் மேற்கு மாம்பலம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளை கொண்டது கோடம்பாக்கம். சென்னைக் கடற்கறையிலிருந்து தாம்பரம் வரைச் செல்லும் புறநகர் ரயில் பாதை கோடம்பாக்கம் வழியாகச் செல்கின்றது. கோடம்பாக்கம் புறநகர் ரயில்நிலையம் இப்பாதையில் அமைந்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துக்கள் கோடம்பாக்கத்தை நகரின் பிறப் பகுதிகளுடன் இனைக்கின்றன.
கோடம்பாக்கம் வழியே செல்லும் ஆற்காடு சாலை (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், ட்ரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
லிபர்டி திரையரங்கம், சேகர் எம்போரியம், மேனகா அழைப்பிதழ்கள், மீணாக்ஷி கல்லூரி, மீணாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி மற்றும் ஃபாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.