தமிழக சுற்றுலா தலம் - ஒகேனக்கல் அருவி

by Nirmala 2010-06-29 17:08:03

தமிழக சுற்றுலா தலம் - ஒகேனக்கல் அருவி



ஒகேனக்கல் அருவி தமிழக கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் தனி அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

கன்னடத்தில் "ஹோகே' என்றால் "புகை'. "கல்' என்றால் பாறை. பலத்த ஆரவாரத்துடன் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பாறைகளின் மீது நீர்விழுந்து வெண்மையான புகை மண்டலத்தை ஏற்படுத்துவதால் இப்பகுதி "ஹோகேனக்கல்' என்று அழைக்கப்பட்டு பின்னர் ஒகேனக்கல்லானது.

இருபுறமும் உயர்ந்த குன்றுகள். இடையில் காட்டாறாய் ஓடும் காவிரி. பரிசலில் சென்றால் பெரும் சப்தத்துடன் விழும் அருவிக்கு மிக அருகிலேயே சென்று கண்டு களிக்கலாம்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு அன்று இங்கு விழா நடைபெறுகிறது. அன்று புதுமணத் தம்பதியினர் இப்புனித நதியில் நீராடினால் எல்லா வளமும் பெறுவர் என்பது ஜதீகம்.

உல்லாசப் பரிசல் சவாரி, புத்துணர்வூட்டும் எண்ணெய் மசாஜ், தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா, உயிரியல் பூங்கா, முதலைப்பண்ணை என சுவாரசியமாய் பொழுதை நகர்த்த பல்வேறு இடங்கள் இங்குள்ளன.

2704
like
1
dislike
1
mail
flag

You must LOGIN to add comments