வரி

by savitha 2009-11-11 10:59:01

வரி
- வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும்.
- சட்டபூர்வமானவையாகக் கருதப்படாமல், அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு.
- மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.
- வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம்.
- வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது.
- தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.
- பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன.
- வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

வரி அறவிடுவதன் நோக்கங்கள்

- அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

* சட்டம், ஒழுங்கைப் பராமரித்தல்,
* சொத்துக்களைப் பாதுகாத்தல்,
* பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கிப் பேணுதல்,
* பொது வேலைகள் (public works),
* சமூகப் பொறியியல் (social engineering)

- பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

* கல்வி முறைமைகள்,
* உடல்நலம் பேணல் முறைமைகள்,
* வயோதிபர்களுக்கான ஓய்வூதியம்,
* வேலையற்றோர் கொடுப்பனவுகள்,
* சக்தி, நீர் வழங்கல், மற்றும் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்,
* பொதுப் போக்குவரத்து.

2758
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments