நீதிமன்றம்

by savitha 2009-11-11 16:53:39

நீதிமன்றம்

- நீதிமன்றம் (court of law) சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் உரிமையியல், குற்றவியல் அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும்.

- மரபுச்சட்டம் மற்றும் உரிமையியல் சட்டங்களில் நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளன.

- நீதிமன்றங்கள் கிராமங்களில் சிறுவீடுகளிலிருந்து (ஆலமரத்தடி பஞ்சாயத்திலிருந்து) மாநகரங்களில் பல நீதிமன்ற அறைகளுடன் பெரும் கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன.

- ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மூன்று தரப்புகள் இன்றியமையாத பங்கு வகிக்கும் - வாதி, பிரதிவாதி, நீதிபதி (actor, reus, and judex.

- "நீதிமன்றம்" என்ற சொல் பெரும்பாலும் மன்றத்தலைவரான நீதியரசரையும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தையும் குறிக்கும்.

- 'ஆள்வரை' (Jurisdiction), ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு நபர் அல்லது உரிமை மீதான அதிகாரம்.
- ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குரிய நீதி பரிபாலன அமைப்பை தீர்மானிக்கிறது.

- நீதிமன்றங்கள் விசாரணை நீதிமன்றங்கள்,(அல்லது முதற்கட்ட நீதிமன்றங்கள் அல்லது மூல ஆள்வரம்பு) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் என வகைபடுத்தப்படுகின்றன. இந்திய நீதித்துறை அமைப்பில், நிலைமுறைப்படி:

* உரிமையியல்
o மாவட்ட முன்சீப் (முதற்கட்டம்)
o சார்பு நீதிபதி
o மாவட்ட நீதிபதி (முதன்மை,முறையீடு,மறுவிசாரணை)

* குற்றவியல்
o நீதிமுறைமை நடுவர் (முதற்கட்டம்)
o உதவி செசன்சு நீதிபதி
o தலைமை நீதிமுறைமை நடுவர்
o செசன்சு நீதிபதி (முதன்மை,முறையீடு,மறுவிசாரணை)
* மாநில உயர்நீதிமன்றம்

* உச்ச நீதிமன்றம்



3051
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments