இசைஞானி இளையராஜா - The Mastro Ilayaraja
by Ramya[ Edit ] 2009-11-12 10:32:26
இசைஞானி இளையராஜா - The Mastro Ilayaraja:
இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற தமிழ்த் திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1970 களின் பிற்பகுதியில் அறிமுகமானார். இதுவரை 800 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை மூன்று முறைப்பெற்றுள்ளார்.
இவர் எழுதிய புத்தகங்கள் :
* சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
* வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
* வழித்துணை
* துளி கடல்
* ஞான கங்கா
* பால் நிலாப்பாதை
* உண்மைக்குத் திரை ஏது?
* யாருக்கு யார் எழுதுவது?
* என் நரம்பு வீணை
* நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
* பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
* இளையராஜாவின் சிந்தனைகள்
"இசையின்றி அமையாதுலகு"