தொன்மா - Dinosaur, டைனசோர்

by Sanju 2009-11-12 10:33:19

தொன்மா - Dinosaur, டைனசோர்



- தொன்மா என்பது Dinosaurரின் மற்றொரு பெயர்.

- தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.



- தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை). தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

2465
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments