சச்சின் டெண்டுல்கர் - Sachin Tendulkur

by Sanju 2009-11-12 10:44:37

சச்சின் டெண்டுல்கர் - Sachin Tendulkur



- சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar, பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார்.

- தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட்டு போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே.

- இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட்டு போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.



- இந்தியாவில் இரண்டாவது உயரிய குடிமுறை விருதான பத்ம விபூஷண் விருதையும் விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

- சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

- பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து சாதனை புரிந்தனர்.



- பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

- பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார்.



2649
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments