மான்

by savitha 2009-11-12 11:57:08

மான்

- மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு.
- அறிவியலில் மான் இனத்தை செர்விடீ (Cervidae) என்பர்.
- ஆண் மானுக்குக் கலை என்று பெயரும், மானின் குழந்தைக்கு மான்மறி அல்லது மறி என்று பெயரும் உண்டு.
- இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள்.
- மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு.
- மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன.
- பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும்.
- மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன.
- கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும்.

3207
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments