இணையம் - Internet

by Sanju 2009-11-13 08:56:29

இணையம் - Internet

- இணையம் (Internet) என்பது உலகளாவிய அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டு இணைப்பு ஆன பெரும் வலையமைப்பைக் குறிக்கும்.

- இவ்விணையத்தில் தரவுப் பறிமாற்றமானது முன்னும் பின்னும் அடையாளம் சேர்க்கப்பட்ட தரவுத்தொடர்களாக (பாக்கெட் சுவிட்சிங்) இணையத்தில் உலா வர செய்யப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.

- உலகளாவிய வலை (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும்.

- இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு.

வரலாறு

1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் கணினி மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள், வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் தரவுப்பொதி நிலைமாற்றம் போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.

- முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.

- 1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது.

- பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.

உலகளாவிய இணைய வலையின் ஒரு சிறு பகுதி




இணையம் - நுட்பியல் சொற்கள்
பொது இணைய பயன்பாடுகள்/செயல்பாடுகள்

           * மின்னஞ்சல், மின்மடல் - Email
           * உலகளாவிய வலை - World Wide Web
           * இணையத்தளம் - Website
           * இணைய உரையாடல் - Internet Chat
           * வலைப்பதிவு - Blog
           * இணைய வானொலி - Internet Radio
           * நிகழ்படத் துண்டு - Clip
           * தரவிறக்கம், பதிவிறக்கம் - Download
           * தரவேற்றம், பதிவேற்றம் - Upload
           * சுட்டிகள், இணைப்புகள், தொடுப்புகள் - Links
           * இணைய அரசு

இணையம் எப்படி செயல்படுகின்றது?

           * இணையம் - Internet
           * புற இணையம் - Internet
           * அக இணையம் - Intranet
           * திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி - OSI Model

                     * மீயுரை பரிமாற்ற நெறிமுறை - Hyper Text Transfer Protocol
                     * பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை - Transmission Control Protocol
                     * இணைய நெறிமுறை - Internet Protocol

           * நெறிமுறை - விதிமுறைகள் - Protocol
           * இணையவிதிமுறை இலக்கம் - Internet Protocol (IP) Number
           * வாங்கி - Client
           * வழங்கி, வழங்கன் - Server
           * தொடுப்பு - Connection
           * இணையச் சேவை வழங்கி - Internet Service Provider
           * மீயுரை - Hypertext
           * மீயிணைப்பு - Hyper Link
           * மீயுரைக் குறி மொழி - Hyper Text Markeup Language
           * துண்டங்கள் - Packets
           * துணிக்கைகள் - Datagrams
           * பொதிகள் - Data Packets
           * பொதி நிலைமாற்று பிணையம் - Packet Switching Network
           * தரவுத்துண்டம் -
           * இணைய முகவரி - Internet Address
           * அனுப்புனர் முகவரி - Sender Address
           * பெறுபனர் முகவரி - Receiver Address
           * திசை காட்டிகள் - Router
           * திசைவி - Router
           * திசைவித்தல் - Routing
           * பாதை - Route
           * தரவு - Data
           * படலை - Port
           * தடம் - Wire
           * ஒருசீர் வள அடையாளம் - Uniform Resource Identifier
           * ஒருசீர் வள இடங்குறிப்பி - Uniform Resource Locator

பொது இணைய செயலிகள்

           * உலாவிகள்
           * தேடல் பொறிகள்

பிற சொற்கள்

           * மூலம் - Source
           * வரவுறை
3300
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments