எனதுயிரே எனதுயிரே - பீமா

by Ramya 2009-11-12 20:23:36

எனதுயிரே எனதுயிரே - பீமா(Enadhuyire from Bheema.):

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

இனி இரவே இல்லை, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை, அன்பே உன் உளரலும் எனக்கு இசை..
உன்னைக் காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

மரமிருந்தால் அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே நான் இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன் வாழும் காலமேவரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல் காதல் வாசமே..

இசையால் மயங்கா இதயமெதுQuestion

Tagged in:

2700
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments