அணில் தன்னுடைய வாலை குடையாகவும் பயன்படுத்திக் கொள்ளும்.
ஆப்பிரிக்கா யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்கு தான்.
முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற விலங்கு நாய். முதன் முதலில் வெப்ப வாயு பலூனில் பயணித்தவை ஒரு காகமும், வாத்தும் தான்.
பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
பர்ப்பிள் ஷோர் எனப்படும் ஒருவகையான நண்டுக்குப் பலம் எவ்வளவு தெரியுமா? தன்னுடைய எடையைப் போல 40 மடங்கு எடையுள்ள பொருளை இழுக்கும் பலம் உடையது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உண்டு.
கறையான் அரிக்காத மரம் தேக்கு.
மாமிசம் உண்ணும் விலங்குகள், மின்னல்தாக்கி இறந்து போன மற்ற மிருகங்களை உண்ணாது.
ஓணானின் நாக்கு அதன் உடலை விட நீளமாக இருக்கும்.
முதலையால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
மிக நீண்ட ஆயுள் உள்ளவை ஆமைகள்.
மிக குறைவான ஆயுள் உள்ள உயிரினம் ஈ.
நீயூகினி தீவிலுள்ள ஒரு சிலந்தி மரங்களுக்கு இடையில் எட்டு அடி நீளம் கொண்ட பெரிய வலைகளைப் பின்னுகிறது. மீனவர்கள் இதை அப்படியே எடுத்துக் கொண்டு போய் மீன் பிடிக்கப் பயன்படுத்துகின்றனர். அரைக்கிலோ எடையுள்ள மீன்களைத் தூக்குமளவிற்கு அந்த வலை உறுதியாக உள்ளதாம்.
பெண் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிட்டவுடன் இறந்து விடும்.