கரிமம் - கார்பன் - Carbon C
by Geethalakshmi[ Edit ] 2009-11-13 11:32:34
கரிமம் - கார்பன் - Carbon C
கரிமம் (கார்பன், Carbon, வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள். விலையுயர்ந்த வைர கற்களும் கரிமம்தான், எரிப்பதற்குப் பயன்படுத்தும் கரியும் கரிமம்தான். 1985 ஆம் ஆண்டு பந்து போன்ற ஒரு கூண்டு வடிவில் 60 கரிம அணுக்கள் கொண்ட ஒரு பெரு விந்தையான வடிவிலும் கரிமம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பக்மினிஸ்டர் ஃவுல்லரீன் என்று பெயர் (சுருக்கமாக பக்கிப் பந்து என்றும் அழைப்பர்).
1 மில்லியனுக்கும் அதிகமான வெவ்வேறு கரிமங்களினால் ஆன மூலக்கூறுகளை வேதியியல் துறையினர் அறிவர்.
கரிமத்தின் அணு எண் 6. எனவே இதனுள் ஆறு நேர்மின்னியும் (புரோட்டானும்), ஆறு எதிர்மின்னியும் (மின்னணு, எலக்ட்ரான்) உள்ளன. இதன் அணு எடை 12. அணுக்கருவுள், 6 நொதுமின்னியும் (நியூட்ரான்) உண்டு.
கரிமத்தின் அடர்த்தி 2.25 கி/கன செ.மீ. C-14 என்பது இக்கரிம அணுவின் ஐசோடோப் (அணுவெண் மாறாமல், அணுவெடை மட்டும் மாறி உள்ள வடிவம்).