அ. முத்துலிங்கம் - தமிழ் எழுத்தாளர்

by Geethalakshmi 2009-11-13 11:41:58

அ. முத்துலிங்கம் - தமிழ் எழுத்தாளர்




அ. முத்துலிங்கம் குறிப்பிடத்தக்க ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

அ.முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார்.

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

இவரது நூல்கள்

* அக்கா (சிறுகதைத் தொகுப்பு -1964)
* திகடசக்கரம் (சிறுகதைத் தொகுப்பு - 1995)
* வம்சவிருத்தி (சிறுகதைத் தொகுப்பு - 1996)
* வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு - 1998 )
* மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதைத் தொகுப்பு - 2001)
* அ. முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுத்தொகுப்பு - 2004)
* அங்க இப்ப என்ன நேரம்? (கட்டுரைத் தொகுப்பு - 2005)
* தற்கால வட அமெரிக்க கதைகள் - மொழிபெயர்ப்பு - தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம் - அச்சில்.

பரிசுகளும், விருதுகளும்

* தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு - 1961
* கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
* ஜோதி விநாயகம் பரிசு - 1997
* திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணிப் பரிசு - 1995
* வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு - 1996
* வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு - 1996
* வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு - 1999
* கனடா தமிழர் தகவல் - நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது - பிப்ரவரி 2006
1884
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments