வேகஸ் நரம்பு

by savitha 2009-11-13 12:09:10

வேகஸ் நரம்பு


- வேகஸ் நரம்பு என்பது மூளையில் இருந்து நேரடியாக புறப்பட்டு வரும் 12 இரட்டை நரம்புகளில், 10 ஆவது இரட்டை நரம்பு ஆகும்.
- இவை குரல்வளை, இதயம், மூச்சுக் குழல், நுரையீரல், வயிறு ஆகிய பல உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியமான நரம்பு.
- மூளையில் இருந்து புறப்படும் 12 இரட்டை நரம்புகளில் இந்த வேகஸ் நரம்புகள் மட்டுமே மூளையின் அடிப்பகுதியாகிய முகுளம் என்னும் இடத்தில் இருந்து புறப்படுவதாகும்.
- வேகஸ் என்னும் இடைக்கால இலத்தீன் மொழிச் சொல் "இங்கும் அங்கும் அலைவது" என்னும் பொருள்படுவது.
- இந்த வேகஸ் நரம்புகளை நுரையீரல்-வயிற்று நரம்புகள் (neumogastric nerves) என்றும் அழைப்பர்.

வேகஸ் நரம்பின் முக்கியத்துவம்:

- வேகஸ் நரம்புகள் உடலில் உள்ள பல உறுப்புகளுக்கும் இயக்கங்களுக்கும் தேவைப்படும் தானியங்கிக் குறிப்புகளைத் தரும் முக்கிய நரம்புகள் ஆகும். நரம்புத் தானியக்கத்தில் உள்ள மூன்று முக்கியப் பணிகளில் ஒன்றாகிய ஓய்வும்-செரிப்பும் என்று கூறப்படும் துணை ஒத்துழைப்புப் பணிகளில் இதயத்துடிப்பை மெதுவாக்குவது போன்ற ஆற்றல் சேமிக்கும் பணிகளுக்கு உதவும் குறிப்பலைகளைத் தாங்கிச் செல்வது இந்த வேகஸ் நரம்புகளில் பணிகளில் முக்கியமானதாகும்.

2093
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments