சோதிடம்
- சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும்.
சோதிடத்துக்கான வானியல் அடிப்படை
கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாரு:
1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாரு:
1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
விண்மீன் குழு இராசி பாகை
அசுவினி மேடம் 13°20'
பரணி மேடம் 26°40'
கிருத்திகை பாதம் 1 மேடம் 30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1 இடபம் 43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1 இடபம் 56°40'
மிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2 மிதுனம் 73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2 மிதுனம் 86°40'
புனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3 கடகம் 103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3 கடகம் 116°40'
ஆயில்யம் பாதம் 4 கடகம் 120°
மகம் சிங்கம் 133°20'
பூரம் சிங்கம் 146°40'
உத்திரம் பாதம் 1 சிங்கம் 150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1 கன்னி 163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1 கன்னி 176°40'
சித்திரை பாதம் 2 கன்னி 180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2 துலாம் 193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2 துலாம் 206°40'
விசாகம் பாதம் 3 துலாம் 210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3 விருச்சிகம் 223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3 விருச்சிகம் 236°40'
கேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°
மூலம் தனுசு 253°20'
பூராடம் தனுசு 266°40'
உத்திராடம் பாதம் 1 தனுசு 270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1 மகரம் 283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1 மகரம் 296°40'
அவிட்டம் பாதம் 2 மகரம் 300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2 கும்பம் 313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2 கும்பம் 326°40'
பூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3 மீனம் 343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3 மீனம் 356°40'
ரேவதி மீனம் 360°