கலப்புலோகம் - கலப்புலோகங்களின் பட்டியல்

by Geethalakshmi 2009-11-13 13:02:04

கலப்புலோகம் - கலப்புலோகங்களின் பட்டியல்


கலப்புலோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, குறைந்தது ஒரு உலோகத்தையாவது உள்ளடக்கிய, தனிமங்களைக் கரைசல் அல்லது சேர்வை நிலையில் கொண்டதும், உலோக இயல்பு கொண்டதுமான ஒரு கலப்புப் பொருள் ஆகும். உருவாகும் உலோகப் பொருள் அதன் கூறுகளிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கும்.

சில சமயம் கலப்புலோகம் அதன் கூறுகளில் ஒன்றான உலோகமொன்றின் பெயராலேயே அழைக்கப்படுவதும் உண்டு. 58% தங்கத்துடன் வேறு உலோகங்கள் சேர்ந்த கலப்புலோகமான 14 கரட் தங்கம், தங்கம் என்றே அழைக்கப்படுகின்றது. இதே நிலை நகைகள் செய்யப் பயன்படும் வெள்ளிக்கும், கட்டுமானத்துக்குரிய அலுமினியத்துக்கும் பொருந்தும்.

அலுமீனியத்தின் கலப்புலோகங்கள்

* அலுமீனியம்-லித்தியம் (லித்தியம்)
* துராலுமின் (செப்பு)
* நாம்பே (அலுமீனியத்துடன், வெளியிடப்படாத ஏழு வேறு உலோகங்கள்)
* சிலுமின் (சிலிக்கான்)
* ஏஏ-8000
* மக்னாலியம் (5% மக்னீசியம்)
* வேறு சிக்கலான கலப்புலோகங்கள்
* அல்னிக்கோ {நிக்கல், கோபால்ட்)

இந்தியம்

* பீல்ட்டின் உலோகம் (பிஸ்மத், தகரம்)

இரும்பு

* உருக்கு (கரிமம்)
o துருவேறா உருக்கு (குரோமியம், நிக்கல்)
+ ஏஎல்-6எக்ஸ்என் (AL-6XN)
+ கலப்புலோகம் 20
+ செலெஸ்ட்ரியம்
+ கடல்சார் தர துருவேறா உருக்கு
+ மார்ட்டென்சிட்டிக் துருவேறா உருக்கு
o சிலிக்கான் உருக்கு (சிலிக்கான்)
o கருவி உருக்கு (தங்ஸ்தன் அல்லது மங்கனீசு)
o குரோமோலி (குரோமியம், மொலிப்தெனம்)
o டமாஸ்கஸ் உருக்கு
o எச்எஸ்எல்ஏ உருக்கு
o ரெனால்ட்ஸ் 531
o வூட்ஸ் உருக்கு

* இரும்பு
o அந்திராசைட்டு இரும்பு (கரிமம்)
o வார்ப்பிரும்பு (கரிமம்)
o பன்றியிரும்பு (கரிமம்)
* பெர்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
* எல்இன்வார் (நிக்கல், குரோமியம்)
* இன்வார் (நிக்கல்)
* கோவார் (கோபால்ட்)
* இரும்புக் கலப்புலோகங்கள்
o பெரோபோரான்
o பெரோகுரோம்
o பெரோமக்னீசியம்
o பெரோமங்கனீசு
o பெரோமொலிப்தெனம்
o பெரோநிக்கல்
o பெரோபொஸ்பரசு
o பெரோடைட்டானியம்
o பெரோவனேடியம்
o பெரோசிலிக்கான்

ஈயக் கலப்புலோகங்கள்

* மொலிப்தோசாக்கோஸ் (செப்பு}

1966
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments