இந்து சமய இலக்கியங்கள்

by Nirmala 2009-11-13 14:31:43

இந்து சமய இலக்கியங்கள்
ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல் ஒவ்வொன்று உள்ளது. நமது இந்து சமயத் திற்கும் வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணம் எனப் பல நூல்கள் உள்ளன.

வேதங்களானது தெய்வீகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. வேதங்களை வியாசர் நான்காக வகுத்துள்ளார். வேதங்களோடு தொடர்பு டைய சம்ஹிதைகள், பிராம்மணங்கள், ஆரண்ய கங்கள் மற்றும் உபநிடதங்கள் இந்து சமய இலக்கியங்களாய் பெருமை சேர்க் கின்றன.

அடுத்து ஆகமம். ஆகமம் என்றால் ஆன்மாக் களின் பாசங்களை நீக்கி வீடுபேற்றை அருளுதல். இவை மொத்தம் இருபத்தெட்டு ஆகமங்கள்

தமிழ் கடவுள் சிவன் மீது பாடப்பட்டவை திருமுறைகள். திருமுறை என்பதற்கு தம்மை அடைந்தவர்களை சிவமேயாக்குகின்ற முறை யெனப் பொருள் கூறுவர். திருமுறைகள் பன்னிரன்டு ஆகும்.

வைணவ சமயத்தில், விஷ்ணுவை தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்ட பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்தவை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும்.

அதேபோல சாத்திரங்கள் இவை பதினான்கு சாத்திரங்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என்பர். இவற்றில் தலை சிறந்தது சிவஞான போதம். சிவம் என்றால் ஒப்பற்ற மெய்ப் பொருள். ஞானம் என்றால் அதனை அறிதல். போதம் என்றால் தெளிதல். எனவே சிவஞான போதம் என்றால் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய கடவுளை அறிந்து தெளிய உதவும் நூல் என்று பொருள் இது மெய் கண்ட தேவரால் அருளிச் செய்யப் பட்டது.

இதனையடுத்து அருணந்தி சிவாசாரிய சுவாமிகளால் இயற்றப்பட்டது சிவஞான சித்தியார் என்பதாம். மேலும் உமாபதி சிவாசாரியாரால் எட்டு நூல்கள் எழுதப்பட்டன. மெய் கண்டார், அருள் நந்தி, உமாபதி சிவம் ஆகிய சந்தனாச்சாரியார்கள் சைவ சித்தாந்தத்தை முறைப்படுத்தியவர் என்ற பெருமை படைத்தோராவர்.

இந்தியாவின் இரு ஒப்பற்ற காவியங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகும். இதிகாசம் என்பதற்கு “ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு’’ என்று பொருள். இராமாயண காவியத்தை இயற்றினார் வால்மீகி முனிவர். பாரதத்தை வியாச முனிவர் இயற்றினார். இதனை ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறுவர். பகவத்கீதை இதனுள் அடங்கியுள்ளது.

அடுத்து புராணம். புராணம் என்பதற்கு பழமை யான வரலாறு என்பது பொருள். புராணங்களை எழுதியவர் வேத வியாசர். இதனை உலகிற்கு அளித்தவர் சூதபுராணிகர் என்பதை அறிவோம். இந்த மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும்.
2142
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments