ஏரியா 51 - இராணுவத்தளம்
by Nirmala[ Edit ] 2009-11-13 14:40:49
ஏரியா 51 எனும் அடை பெயர் கொண்ட இராணுவத்தளம் மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது, (லாஸ் வேகாஸின் கீழ்ப்பகுதியில் வடக்கு-வடமேற்கு 83 மைல்களில்). அதன் மத்தியில் க்ரூம் ஏரியின் தென் பகுதியில் பெரிய இரகசிய இராணுவ விமானத் தளம் அமைந்துள்ளது. இந்த இராணுவ தளத்தின் முதன்மைப் பயன்பாடானது பரிசோதனை ரீதியிலான விமானங்களையும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டிற்கும் மற்றும் சோதனைக்கும் உதவி புரிவதேயாகும்.
அமெரிக்க விமானப் படையின் பரந்த நெவேடா சோதனை மற்றும் பயிற்சி பரப்பெல்லைக்குள்ளேயே இத்தளம் இருக்கிறது. பரப்பெல்லையின் வசதிகளை நெல்லிஸ் விமானத் தளத்தின் 99வது விமானத் தளப் பிரிவு நிர்வகித்து வந்தாலும், க்ரூம் வசதியானது, அதன் அருகிலுள்ள186 miles (300 km) மொஜாவெ பாலைவனத்தின் எட்வர்ட்ஸ் விமானத் தளப் பிரிவின் விமானப் படையின் பறக்கும் சோதனை மையத்தின் சேர்ப்பாகவே நிர்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது, அது விமானப் படை பறககும் சோதனை மையம் என்றே அறியப்படுகிறது.
இவ்வசதிக்கு வேறு பெயர்களாக ட்ரீம்லேண்ட் , பாரடைஸ் ரான்ச் , ஹோம் பேஸ் , வாட்டர்டவுன் ஸ்ட்ரிப் , க்ரூம் லேக் , வெகு சமீபத்திய ஹோமே ஏர்போர்ட் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இப்பகுதி நெல்லிஸ் இராணுவ நட்வடிக்கைப் பகுதியின் அங்கமாகவும், தளத்தைச் சுற்றி கட்டுப்படுத்தப்பட்ட விமானப் பரப்புப் பகுதி (R-4808N), என்று குறிக்கப்படுவது, இராணுவ விமான ஓட்டிகளால் "த பாக்ஸ் " என அறியப்படுகிறது.
கடுமையான இரகசியம் காக்கப்படும், அமெரிக்க அரசினால் அவ்வாறு ஒன்றிருப்பதாக திறந்த மனதுடன் ஒப்புக்கொள்ளப்படும் தளமானது, பன்முறை சதிகார கோட்பாடுகளைப் பேசுவோரால் அடிக்கடி குறிப்பிடப்படும் பொருளாகவும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் (பறக்கும் தட்டு போன்ற)பற்றிய ஆய்வாளர்களுக்கும் மையப் பொருளாகிறது.