பெப்சி - pepsi - மென்பானம் - cool drinks

by Nirmala 2009-11-13 15:12:31

பெப்சி (Pepsi) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது பெப்சிகோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையாகிறது. Caleb Bradham என்பவரால் 1890களில் தயாரிக்கப்பட்ட இப்பானம் 1898 ஆகஸ்ட் 28 அன்று பெப்சி எனப் பெயரிடப்பட்டது.
கோலா, பெப்சி மீது சீனா குற்றச்சாட்டு

சீன தலைநகரம் பீஜிங்கில் தண்ணீர் மாசுபட, கோக - கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. மாசுபடுதல் மற்றும் மின்சார பயன்பாடு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த சீன அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக 2006லிருந்து, 2010க்குள் 20 சதவிகிதம் வரை மின் பயன்பாட்டை குறைக்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளது. எனினும், இதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதற்காக பல்வேறு ஆய்வுகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.
இதேபோல், சுகாதார மாசுபாடு தொடர்பாக, பீஜிங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தண்ணீரை அதிகமாக மாசுபடுத்தும் முதல் 12 நிறுவனங்களில் கோக -கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் இடம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை பீஜிங் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வெளியிட்டுள்ளது. மின்சார பயன்பாடு மற்றும் மாசுபடுதல் ஆகியவைகளை கட்டுப்படுத்த 27 நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க அந்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அந்நிறுவனங்கள் புதிய திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
1943
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments