ஆங்கிலம் - English - நவீன ஆங்கிலம் - Modern English
by Geethalakshmi[ Edit ] 2009-11-13 17:29:36
ஆங்கிலம் மொழி - English Language
ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது.
அமெரிக்க, பிரிட்டிஷ் நாடுகளின் உலகளாவியரீதியான செல்வாக்காலும், மருத்துவம், விஞ்ஞானம், சினிமா, இராணுவ, விமான, கணினி போன்ற முக்கிய துறைகளில் ஆங்கிலமொழி பேசுவோரின் ஆதிக்கம் காரண்மாகவும் எனைய மொழிகளைவிட ஆங்கிலம் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. உலகின் அதிக பட்ச நாடுகளை ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிகளாக ஆட்சி புரிந்ததால் ஆங்கிலம் ஒரு உலக மொழி ஆகிவிட்டது.
நவீன ஆங்கிலம் Modern English
நவீன ஆங்கிலத்தை 1500 – 1800 வரை பேசப்பட்டதை "முன்னைய நவீன ஆங்கிலம்" என்றும், 1800 இலிருந்து தற்போது வரைப் பேசப்படுவதை "பின்னைய நவீன ஆங்கிலம்" என்றும் வரையறுத்துள்ளனர்.