அழகே சுகமா? அன்பே சுகமா? - பார்த்தாலே பரவசம் - பாடல் வரிகள்

by Geethalakshmi 2009-11-25 19:17:43


அழகே சுகமா? - பார்த்தாலே பரவசம் - பாடல் வரிகள்





அழகே சுகமா?

உன் கோபங்கள் சுகமா?

அன்பே சுகமா?
உன் தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?
உன் தனிமை சுகமா?


வீடு வாசல் சுகமா?
உன் வீட்டு தோட்டம் சுகமா?
பூக்கள் எல்லாம் சுகமா?
"உன் பொய்கள் எல்லாம் சுகமா?"

அழகே உனை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கமென்று
விளக்கை அனைத்து அழுதேன்


அன்பே உனை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்.

பழைய மாலையில் புதிய
பூக்கள் தான் சேராதா!
பழைய தாலியில் புதிய
முடிச்சுகள் கூடாதா!

வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!
வாழ்க்கை ஓர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா!

சிறுமை கண்டு தவித்தேன்
என் சிறகில் ஒன்றை முறித்தேன்
ஒற்றை சிறகில் ஊனபறவை
எத்தனை தூரம் பறப்பேன்!

அன்பே உனை அழைத்தேன்
உன் அஹிம்சை இம்சை பொறுத்தேன்
சீதை குளித்த நெருப்பில் என்னை
குளிக்க சொன்னால் குளித்தேன்

அழுத நீரில் கரைகள் போய்விடும்
தெரியாதா!
குறைகள் உள்ளது மனித உறவுகள்
புரியாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!
இது கண்ணீர் நடத்தும் பேச்சுவார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா!

கன்னம் இரண்டு சுகமா?
அதில் கடைசி முத்தம் சுகமா?
உந்தன் கட்டில் சுகமா?
என் ஒற்றை தலையணை சுகமா?


Tagged in:

2919
like
17
dislike
1
mail
flag

You must LOGIN to add comments