Oh Priya Priya.. - Idhayaththai Thirudaathey..

by savitha 2009-11-26 14:59:51



ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதா
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி
அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பட்ஹொஅ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசா லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்...

Tagged in:

1013
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments