உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் முன்னாள் அமைந்த ஏழு வானளாவிகள் ஆகும். 1972இல் திறந்த இக்கட்டிடம் 1972 முதல் 1973 வரை உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. கட்டிடக்கலைஞர் மினோரு யமசாக்கியின் வடிவமைப்பில் வந்த இக்கட்டிடம் இரண்டு தடவை தாக்குதல் செய்யப்பட்டது. முதலாம் தடவை 1993இல் குண்டுவெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். இரண்டாம் தடவை செப்டம்பர் 11 தாக்குதல்களில் அல் கைதா விமானங்களால் தற்கொலைத் தாக்குதல்கள் செய்து இக்கட்டிடங்கள் எரிந்து அழிந்தன.