kaadhoadudhaan naan paaduvaen lyrics - Velli Vizha

by Sanju 2009-12-15 13:10:35


காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கண் மூடுவேன்

(காதோடுதான்)

வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா - குல
விளக்காக நான் வாழ வழி காட்டவா

(காதோடுதான் )

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

(காதோடுதான் )

Tagged in:

1022
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments