'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!

by Geethalakshmi 2009-11-30 18:56:07

'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!



அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள "டாக்டாக்' நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.

இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
2122
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments