உங்களுக்குத் தெரியுமா?

by Geethalakshmi 2009-12-03 22:28:27


உங்களுக்குத் தெரியுமா?



* உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

* உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

* உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

* உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

* உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.

* இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

* உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

* உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை.

* இதன் நீளம் 24,140 கி.மீ.
1836
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments