News - காலாவதியான எரிவாயு சிலிண்டர்கள்
by Nirmala[ Edit ] 2009-12-04 09:32:36
காலாவதியான எரிவாயு சிலிண்டர்கள்
நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எரிவாயு சிலிண்டர்கள் காலாவதி ஆவது என்பது பற்றி எப்போதாவது நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆனால், அது உண்மைதான்.
அவ்வாறு காலாவதியான சிலிண்டர்களைப் பயன்படுத்தும்போது விபத்துகள் நேரலாம் என்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல.
எரிவாயு முகவர் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு சிலிண்டர் வரும்போது A, B, C, D என்ற ஆங்கில எழுத்துக்-களு-டன் இணைந்து காலாவதி ஆகும் ஆண்டு சிலிண்டரின் மூன்று பக்கங்-களில் ஏதேனும் ஒன்றில் குறிக்கப்பட்-டிருக்கும்.
A என்றால் மார்ச் மாதத்துடன் முடியும் முதல் காலாண்டு,
B என்றால் ஜூனுடன் முடியும் இரண்டாம் காலாண்டு,
C என்றால் செப்டம்பருடன் முடியும் மூன்றாம் காலாண்டு,
D என்றால் டிசம்பருடன் முடியும் நான்காம் காலாண்டு.
D 13 என்றால் 2013 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.
D 6 என்றால் 2006 ஆம் ஆண்டு டிசம்பருடன் காலாவதி ஆகிறது என்று பொருள்.
அதில் எரிவாயு கசிவு ஏற்பட்டு, விபத்து நேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய காலாவதி ஆன சிலிண்டர்களை உங்களுக்குக் கொடுத்-தால் வாங்காதீர்கள்; திருப்பி அனுப்புங்கள்