ஆங்கில இலக்கணம் - ஆங்கிலம் (English)
by Ramya[ Edit ] 2009-12-04 14:46:04
ஆங்கிலம் (English):
ஆங்கிலம் (English) இங்கிலாந்தில் தோன்றிய மொழி. இங்கிலாந்து மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் மற்ற நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு மக்களின் தாய்மொழியாகவும் அது விளங்குகிறது.
ஆங்கில இலக்கணம் (English Grammar):
இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி. ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்டிரியமையாததாக உள்ளது. தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை, பெயர்ச்சொல்(1.Noun, 2.Pronoun), வினைச்சொல்(3.Verb), உரிச்சொல்(4.Adjective, 5.Adverb), இடைச்சொல்(6.Preposition, 7.Conjunction, 8.Interjection). இதனை Parts of speech (சொற்களின் வகை) என்பர்.