தமிழ் மொக்கைஸ் பாஸ்

by Geethalakshmi 2009-12-23 16:15:27

தமிழ் மொக்கைஸ் பாஸ்

என் மனைவி ரொம்ப சென்சிடிவ் ஆயிட்டா!

எப்படி?

புது டீ.வி.சீரியல் பற்றி விளம்பரம் காட்டுறப்பவே
அழுதுடுவா!

——————————————————————

தலைவர் ஜெயிலுக்குப் போயும் பந்தா குறையலே!

எப்படி?

கம்பி எண்ண கால்குலேட்டர் வேணும்னு
ஜெயிலரைக் கேட்டாராம்!

——————————————————————-

அந்த நடிகைக்கு கால்லே சுளுக்கா எப்படி?

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு
கொஞ்சம் வேகமா தாவிட்டாங்களாம்!

——————————————————————–

இந்த சீரியல்காரங்க ரொம்ப அட்வான்ஸா
போறாங்க. . .

அவங்க தொடர்ரைப்பார்த்து அதிகமா
அழறவங்களை துக்கம் விசாரிக்க ஆள்
அனுப்பறாங்க!

———————————————————————–

இந்த ஆபிஸ்லே ‘உங்களுக்கு பணிசெய்ய எங்களுக்கு
உதவுங்கள்’னு எழுதி வெச்சிருங்காங்களே அதுக்கு
என்ன அர்த்தம்?

வேறென்ன….லஞ்சம் கொடுங்கன்னு அர்த்தம்!

———————————————————————-

Tagged in:

1949
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments