எப்படி என்னுள் காதல் வந்தது

by GJSenthil 2009-12-26 12:31:56

இரு சக்கரவாகன வாகா வலது விழியை விபத்தாக்கி
விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்


அவள் புருவத்தை சாய்த்து பார்க்கவில்லை
புன்னகையில் ஒரு மாற்றமில்லை
கால் விரலால் நிலம் தோண்டவில்லை
கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை
எப்படி என்னுள் காதல் வந்தது
எப்படி என்னுள் காதல் வந்தது


ஓஹோ … எச்சில் உணவு கொடுக்கவில்லை
நீ எனக்காய் இரவில் விழிக்கவில்லை

நீ பார்த்ததும் ஆடை திருத்தவில்லை
பாஷையில் முனைகளை சேர்க்க்கவும்மில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது
ஓஹோ ஹோ எப்படி என்னுள் காதல் வந்தது

என்னை பார்த்ததும் குழந்தை தூக்கி முத்தம் கொடுக்கவில்லை
என் பேர்க்கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துபபோவதில்லை
என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திறந்து பார்த்ததில்லை
ஒ … என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை
ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் ..
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை என்னிடமேதான் கேட்கத்தோணுது
ஹோ . ஹோ …. ஹோ .

என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை
சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதும்மில்லை
அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்த சுவடும்மில்லை
ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை
ஆனாலும் … ஆனாலும் .. ஆனாலும் …
எப்படி என்னுள் காதல் வந்தது
அதை எப்படி நான் போய் சொல்வது (அவள் )

Tagged in:

1914
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments