வா வா நிலவப்புடிச்சித்தரவா பாடல் நான் மகான் அல்ல

by Geethalakshmi 2010-08-03 23:52:14

வா வா நிலவப்புடிச்சித்தரவா பாடல் நான் மகான் அல்ல

வா வா நிலவப்புடிச்சித்தரவா
வெள்ளி பொம்மையாக்கித்தரவா
ஓஹோ விழியும்போதுதான் மறைஞ்சிப்போகுமே கட்டிப்போடு மெதுவா (வா வா..)

வானத்தில் ஏறி ஏணைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ

கவலை நம்மை சில நேரம் கூரைப்போட்டுக்கொண்டாடும்
நீ என்னைத் தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலைச்சேரும் நதியாவும் தன்னைத்தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும் வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை புரிந்தாலும் துயரம் இல்லை (வா வா..) ஆஹா ஹா ஹா

இரவைப்பார்த்து மிரலாதே இதயம் வேர்த்துத் துவலாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால் நிலவின் அழகுத் தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும் அட வந்துப்போனால் மறுபடி ஒன்று புதிதாய் உருவாகும் (வா வா..)

படம்: நான் மகான் அல்ல
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ராகுல் நம்பியார்
வரிகள்: நா. முத்துக்குமார்

வா வா நிலவப்புடிச்சித்தரவா பாடல் நான் மகான் அல்ல
3035
like
2
dislike
1
mail
flag

You must LOGIN to add comments