விநாயகர் சதுர்த்தி

by Geethalakshmi 2010-09-11 11:08:56

விநாயகர் சதுர்த்தி




விநாயகர் சதுர்த்தி முதன்முதலில் மகாராஷ்டிராவில் மட்டுமே கொண்டாடப்பட்டுவந்தது. பால கங்காதர திலக், பிள்ளையார் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற எண்ணத்தைக் கொண்டுவது இந்த விழாவை நாடு முழுவதும் பரப்பினார். விநாயகரின் பிறந்தநாளை கொண்டாடுவதே விநாயகர் சதுர்த்தி ஆகும்.

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. ஆம் அச்சிறுவன் தான் பிள்ளையார். இப்படித்தான் பிள்ளையார் பிறந்தார்.

இப்படிபட்ட வீரமான விநாயகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதே விநாயகர் சதுர்த்தியாகும்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

2521
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments