ECHO என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா
by vinothkumar[ Edit ] 2010-09-16 21:35:27
கிரேக்க கடவுள் ஜுபிடர் தன் மனைவி ஜுனோவை ஏமாற்றும் பொருட்டு அவளோடு அரட்டை அடிக்க ஒரு இளம் அழகிய தேவதையை ஏற்பாடு செய்கிறார். அவ்வாறு தன் மனைவி அரட்டை அடிக்கும் சமயம் மற்ற பெண்களோடு உல்லாசமாக இருப்பது ஜுபிடரின் வழக்கம். ஒரு நாள் இதை அறிந்த ஜுனோ வெகுண்டு எழுந்து தன்னிடம் அரட்டை அடிக்கும் தேவதை எக்கோவை தண்டிக்கிறாள். அந்த தேவதையின் குரலைப் பறித்துக் கொண்டு அடுத்தவர்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை மட்டும் அவள் உச்சரிக்கும்படி செய்து சாபம் விடுகிறாள். அதனால்தான் நாம் பேசும் போது கடைசி சொல் மட்டுமே எதிரொலிப்பதை ஆங்கிலத்தில் அந்த தேவதையின் ஞாபகமாக எக்கோ (Echo) என்று பெயர் வந்தது.