அண்ணன் தம்பி இருவரும் இரட்டையர்கள். ஆனால் தம்பி அண்ணனுக்கு இரண்டு நாள் முன்னதாக பிறந்த நாள் கொண்டாடு

by vinothkumar 2010-09-16 21:36:48

இரண்டு பேரும் இரட்டையர்கள். ஆன தம்பி முன்னாடியே பிறந்தநாள் கொண்டாடுறான்.என்னடா சின்னப்புள்ளத்தனமா இருக்குன்னு நீங்க நெனைக்கறது என் காதுல கேட்குது.இருந்தாலும் சொல்ல வேண்டிய நம்ம கடமைய பண்ணித்தான ஆகணும்.

அது ஒண்ணும் பெரிய விசயம் எல்லாம் இல்லைங்க. இந்த மூள வளர்ச்சி நம்மள விட கொஞ்சம் அதிகமா வளர்ந்து ஒரு வெள்ளை சட்டைய மாட்டிக்கிட்டு எதாவது ஒரு ரூமுக்குள்ள விட்டத்த பாத்திட்டு இருப்பாங்களே....அதாங்க இந்த விஞ்ஞானினு சொல்லுவாங்களே...அவங்கதான். ஏற்கனவே கோக்குமாக்கா இருக்கற இந்த உலகத்துல ஏகப்பட்ட கோடப் போட்டாய்ங்க.. அதுல ஒன்னுதான் இந்த "சர்வதேச தேதிக் கோடு (International Date Line)". அதாவது அந்த கோடு பயணம் செய்யற இடத்துல ஒரே நாட இருந்தாலும், ஒரே நாளா இருந்தாலும் கோட்டோட ஒரு பக்கம் ஒரு தேதி ஆகவும், இன்னொரு பக்கம் அடுத்த தேதி ஆகவும் இருக்குமாம். சும்மா சொல்லனும்னா, இப்போ நம்ம சென்னைய எடுத்துக்குவோம். நம்ம அண்ணா சாலை மேல அந்த கோடு போகுதுன்னு வச்சிக்கலாம். அப்போ அண்ணா சாலைக்கு இந்த பக்கம் இருக்கற திருவல்லிக்கேணில தேதி ஜுன் 8 அப்படின்னா, அண்ணா சாலைக்கு அந்த பக்கம் இருக்கற எழும்பூர்ல தேதி ஜுன் 7 ஆக இருக்குமாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...


சரி நம்ம மேட்டருக்கு வருவோம்...எல்லார்க்கும் ஒரளவு புருஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.
ஒரு சின்ன கதைல சொல்லுவோம். ஒரு அம்மா ஒரு படகுல போறாங்க..அவுங்க அந்த சர்வதேச நாள் எல்லைக் கோட்ட கடக்கறதுக்கு ஒரு நிமிசம் முன்னாடி அந்த நாட்டுல தேதி மார்ச் 1..அப்போ அண்ணன் பிறக்கிறான். அந்த கோட்ட கடந்த பின்னாடி அந்த நாட்டுல தேதி பிப்ரவரி 28. அப்போ தம்பி பிறக்கிறான். அவ்வளவு தாங்க.. கதை முடிஞ்சுது...இருங்க இருங்க! நீங்க அடிக்க வரது புரியுது..ஒரு நாள் தானே வித்தியாசம், எப்படி இரண்டு நாள்னு கேட்கிறது புரியுது..அதாவதுங்க இந்த லீப் வருடம் வரும் போது பிப்ரவரி 29 நாள் வருது. அதான்...அதே தான்...
2651
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments