அடி மேல் அடி வாங்கும் த்ரிஷா!

by bharathi 2010-10-12 15:48:18

ஒரு காலத்தில் த்ரிஷாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய ரசிகர்கள்தான் அழகான புதுமுக நடிகைகளுக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால்... டைரக்டர்களும் த்ரிஷாவை புறக்கணித்து விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா. மன்மதன் அம்பு படத்தில் தனி நாயகியாக நின்று மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என நினைத்திருந்த த்ரிஷாவுக்கு முதல் ஏமாற்றமாக, அந்த படத்தில் களவாணி நாயகி ஓவியாவை ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத த்ரிஷாவுக்கு மீண்டும் ஒரு அடி விழுந்துள்ளது. இந்தமுறை அடி கொடுத்திருப்பவர் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் படத்தை இயக்கிய கவுதம் மேனனை விட, நாயகனாக நடித்த சிம்புவை விட... அதிக பாராட்டுக்களை பெற்றவர் ஜெஸி கேரக்டரில் நடித்த த்ரிஷாதான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதனால்தான் இந்த படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்த டைரக்டர் கவுதம் மேனன், இந்தியிலும் த்ரிஷாவையே நாயகியாக ஒப்பந்தம் செய்தார். கட்டா மிட்டா மூலம் பாலிவுட்டில் அறிமுகமான த்ரிஷாவுக்கு அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. இதனால் கவலையில் இருந்த அவருக்கும் கவுதமின் இந்த முடிவு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த இன்ப அதிர்ச்சி இப்போது வெறும் அதிர்ச்சியாகி விட்டது. இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை புக் செய்து விட்டாராம் கவுதம். அடி மேல் அடி விழுந்த வருத்தத்தில் இருக்கிறார் த்ரிஷா.

Tagged in:

1769
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments