நீயும் நானும் பாடல் வரிகள் மைனா

by Geethalakshmi 2010-11-18 12:39:40


நீயும் நானும் பாடல் வரிகள் மைனா




நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள

நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளி தருவேன்

"ஓராயிரம் உறவுகள் இருக்குது கவலை இல்லே
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ளே
பறவைகள் பறந்திட சொல்லி தர தேவை இல்லே"


நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்குமையா
வீசும் காதும்
கூவும் குயிலும்
நெனைச்சது கெடைக்கும் புள்ளே

நாம நெனைச்சது நடந்துச்சி நல்ல படி
அந்த சாமிக்கு என்ன சொல்லுவேன்
நாம கேட்டதும் கிடைசிட்ட வாழ்கைய தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்
ஆசை கொஞ்சம் வேணும்
அது ஆயுள் நாளை கூட்டும்
அட ஒன்னும் இல்லே
வாழ்க்கை கஷ்டம் இல்லே
அத நெனைச்சாலே போதும் புள்ளே

நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ளே

தெரு கோடியில் கெடந்த வாழ்க்கையும் தான்
இப்போ கோடியில் பொரளுதடா
இந்த பூமிய கூட கையில் சுத்தும்
அந்த ரகசியம் தெரிஞ்சதடா
காதல் தானே மாற்றம்
நம்ம உயர தூக்கி மாட்டும்
அட சொன்னா கேளு
வாழ்கை சுத்தும் பூவு
உன்ன கொண்டாடி போகும் புள்ளே

நீயும் நானும் பாடல் வரிகள் மைனா


Tagged in:

2295
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments