செப்டம்பர் மாதம், அலைபாயுதே Song - பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை

by rajesh 2010-01-01 19:18:50

Movie Title : அலைபாயுதே
Song Title : செப்டம்பர் மாதம்
Music Director : A.R.ரெஹ்மான்
Singer's: ஆஷா போன்ஸ்லே, ஷங்கர் மகாதேவன்
Lyricist: வைரமுத்து


துன்பம் தொலைந்தது... இன்பம் தொலைந்தது ...

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம் (௨ )
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்பொ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம் வாழ்வின்
துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின்
இன்பத்தை தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

ஏ பெண்ணே ...
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங்கொழுந்து ஏ கண்ணே ..
ஓ நிறையில் மட்டுமே காதல் பார்க்கும்
குறையில் மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா
காதல் பார்ப்பது பாதி கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளி மூக்கின் நுனி மூக்கில் கோபங்கள்
அலைகின்ற ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
அஹா ஆ அஹா அஹா ஆ அஹா அஹா ஆ அஹா ஆ
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

நான் கண்டேன் ...
காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் பூவைத் தாடு வா அன்பே
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவையிருக்காது

செப்டெம்பர் மாதம் செப்டெம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம்
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது அப்போ ...
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ...
கல்யாணம் முடிந்ததே அப்போ

1911
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments