படம் : அமர்க்களம்
பாடல் : உன்னோடு வாழாத வாழ்வென
Music : பரத்வாஜ்
பாடியவர் Singer: சித்ரா
கவிஞர் : வைரமுத்து
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உல் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உல் நெஞ்சு சொல்கின்றது
மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையொஅ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையொஅ
உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உல் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு
நீ ஒரு முல்லேன்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை