மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு - அமர்க்களம் Song

by rajesh 2010-01-02 21:12:52

படம் (Movie) : அமர்க்களம்
பாடல் (Song) : மேகங்கள் என்னை தொட்டு
Music Director : பரத்வாஜ்
பாடியவர் Singer: S.P.பாலசுப்ரமணியம்
கவிஞர் : வைரமுத்து

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல ஏறி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய்
உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூல்களைஎல்லாம் அடி தூயவளே உனக்குள்
தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ச்ன்ஜானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ச்ன்ஜானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல ஏறி அமிலத்தை வீசியவர் எவருமில்லை
1907
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments