பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
ஆண்:
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் முல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,
காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மலை துளி கூட ஏன் தாயின்,
மடியினில் தவள தினம் ஏங்கும்,
நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்துகொல்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,
பெண்:
தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒழி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,
ஆண்:
ஐந்தெழுத்து புது ஒளியை,
அறிய வைத்தால் ஏன் அண்ணை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
போஒமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,
அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஒற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,
பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேறொன்றை,
பெண்:
கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,
ஆண்:
சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து ,
பூமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம்,