ஏலே இளங்கிளியே பாடல் வரிகள் நினைவு சின்னம்

by Geethalakshmi 2011-07-27 16:13:49


ஏலே இளங்கிளியே பாடல் வரிகள் நினைவு சின்னம்




ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
யாரடி உன்னைப் படைத்தார்
அன்னையும் தந்தையும் இல்லை
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை
கண்கள் தான் பட்டு விடுமே
பாடடி பாசக் கவிதை
நெஞ்சகம் தான் கெட்டு விடுமே
என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மை தான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வாரம் வேண்டி நிற்க
தெய்வம் தான் தந்தது உன்னைத் தான் இளங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

பாடல்: ஏலே இளங்கிளியே
திரைப்படம்: நினைவுச் சின்னம்
பாடியவர்: பி. சுசிலா
இசை: இளையராஜா


Tagged in:

2271
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments