படித்ததில் பிடித்தது-1

by Nagendran 2013-03-12 14:24:19

கிரேசி மோகனிடம் இருந்து வந்த முத்து : வீட்டுக்கு வரவங்க கிட்ட காபி சாப்பிடுகிறீர்களா என்று கேட்க கூடாது. என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தான் கேட்க வேண்டும். அவன் சொல்லணும் என்ன வேணும்னு. நீங்க அவனுக்கு காபிதான் இருக்குன்னு ஒரே ஒரு ஆப்ஷனை கொடுக்க கூடாது.
——————————————
முன்பெல்லாம் ரயிலில் சென்றால் ரயில் சிநேகிதம் என்று ஒன்று வரும். இப்போவெல்லாம் எவனும் எவன்கூடவும் பேசுவதில்லை. புருஷன் பொண்டாட்டிகூட செவிட்டு மிஷினை போல் செல்போனை காதில் மாட்டிகொண்டு பாட்டு கேட்டுகொண்டு வருகிறார்கள்.
——————————————
வீட்டில் இண்டக்சன் அடுப்பு வாங்கினார்கள். அதனுடன் வரும் விளக்கப்புத்தகம் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இண்டக்சன் பயன்படுத்துபவர்களுக்கு கண்டிப்பா ஆங்கிலம் தெரியணுமோ ? இல்லை ஆங்கிலம் தெரிஞ்சாதான் இன்டக்சன் பயன்படுத்தலாமா ? நான் சென்று வீட்டில் அதை இயக்குவதுவரை ஒருமாதம் தண்டமாக இருந்தது அடுப்பு. அம்மாவுக்கு ஆங்கிலம் புரியாது. அப்பா இதிலெல்லாம் தலையிடுவதில்லை. தமிழ்நாட்டுலதானே இருக்கோம் ?
——————————————
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அமைச்சர்களின் பெட்ரோல் டீசல் கணக்கை எதோ ஒரு புண்ணியவான் வாங்கியிருக்கான். விமானத்தில் செல்வதை கட்டுப்படுத்தி காரில் செல்லுங்கள் என்று கல்லூளிமங்கன்சிங் சொல்லியதற்கு அப்புறம் எடுத்த கணக்கின் படி மூன்று மடங்கு அதிகமாக பெட்ரோல் செலவாகியுள்ளது. எப்படி என்றால், விமானத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சொந்த காசில் அமைச்சர் செல்ல வேண்டும். இப்போ கார் இருப்பதால் வீட்டு நாய்க்கு ஒடம்பு சரியில்ல என்றாலும் நம்ம செலவுல அத காருல ஏசிபோட்டு கால்நடை மருத்துவரிடம் காட்டலாமில்லையா ? இந்த லட்சணத்துல பெட்ரோல் விலை 72 ரூபாய் ஆகபோகுது.
——————————————
லாட்டரியை தடை செய்தபொழுது அதை வைத்து பிழைப்பு செய்துகொண்டிருந்த மாற்றுதிறனாளிகள் நடு வீதிக்கு வந்துடுவாங்கடோ என்று ஒரு ஓநாய் கும்பல் கண்ணீர் வடித்தன. மாற்றுதிறனாளிகள் இப்பொழுது ஊக்கு, காது குடையும் பஞ்சு, சென்னை வரைபடம், பஸ் ரயில் நேரம் மற்றும் வழித்தடங்கள் அடங்கிய புத்தகம், குழந்தைகள் சொப்பு இன்னும் பல உருப்படியான பொருட்களை வைத்து கம்பீரமாக வியாபாரம் செய்கின்றனர். உழைப்பவன் என்றுமே உழைப்பான். ஏய்ப்பவன் அவர்களுக்காக முதலை கண்ணீர் சிந்துவான்.
——————————————
இந்த லேப்டாப் மற்றும் மொபைல் இன்டர்நெட் இல்லை என்றால் இருக்கும் பணி அழுத்தத்தில் ஊருக்கே செல்ல முடியாது. வாழ்க மடிக்கணினி மற்றும் இணையம்
——————————————
பாக்ஸ் ஹிஸ்டரி சேனலில் sliced என்று ஒரு நிகழ்ச்சி. ஒழுங்கா வேலைசெய்யும் பொருட்களை சும்மா தாறுமாறா உடைத்துபோடுகிறான் ஒருவன். அந்த பொருள் எப்படி வேலை செய்கிறது என்றும் விளக்குவதில்லை. எதுக்கு அந்த நிகழ்ச்சியென்று இதுவரை எனக்கு பிடிபடவில்லை.
——————————————
தாஜ் மகாலை தொடர்ந்து சீனப்பெருஞ்சுவர் இடியப்போகுதாம். அதற்கு காரணம் அதன் அருகில் மணல் அள்ளுவதாலாம். இயற்கையை தான் மதிப்பதில்லை. மனிதன் உருவாகினதையும் மனிதனே மதிப்பதில்லை. என்னடா இது ? மங்கோலியாவை ஆக்கிரமிக்க சீனா போடும் திட்டமாகூட இது இருக்கலாமோ ?
2215
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments