தைப்பொங்கல்

by Sanju 2010-01-03 16:49:29

தைப்பொங்கல்

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.



தைப்பொங்கல் வரலாறு

- சங்ககாலத்தில் பொங்கலின்போது பெண்கள் அனைவரும் பாவை நோன்பு இருப்பார்கள். இது பஞ்சபாண்டவர் காலத்தில் பிரசித்தம்.

- மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் விரதம் இருப்பார்கள். இந்த மாத காலத்தில் பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட எதையும் தொடமாட்டார்கள்.

- மற்றவர்கள் மனம் நோகும்படியும் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். தினமும் குளித்து, ஈர மண்ணில் செய்த காத்யாயனி அம்மனை வணங்குவார்களாம்.

- அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்.

- தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

1830
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments