நெஞ்சே நெஞ்சே நீ எங்கே - அயன் பாடல்

by rajesh 2010-01-03 17:16:51

படம் (Movie) : அயன்
பாடல் (Song) : நெஞ்சே நெஞ்சே
Music Director : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் Singer: மதி, ஹரிஷ் ராகவேந்திர
கவிஞர் : வைரமுத்து

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே
நான் இங்கே
தேகம் இங்கே
நம் ஜீவன் எங்கே

என் நதியே
என் கண் முன்னே
வற்றி போனாய்
பால் மழையாக
எனை தேடி
மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல்
கடலில் ஏன் சேர்கிறாய்

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

கண்ணே
என் கண்ணே
நான் உன்னை காணாமல்
வானும் மண்ணும்
பொய்யாக கண்டேனே
அன்பே
பேர் அன்பே
நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி
நான் இற்று போனேனே
வெயிற்காலம் வந்தால்தான்
நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால்தான்
காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம்
என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே
நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கல்வா எ கல்வா
நீ காதல் செய்யாமல்
கண்ணும்
என் நெஞ்சும்
என் பேச்சை கேட்க்காதே
காதல்
மெய் காதல்
அது பட்டுபோகாதே
காற்று
நம் பூமி
தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி
போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே
ஹே மச்ச தாமரையே
என் உச்ச தாரகையே
கடல் மண்ணை போனாலும்
நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே
நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே
நான் இங்கே
தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

என் நதியே
என் கண் முன்னே
வற்றி போனாய்
வான் மழையாக
எனை தேடி
மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீராமல்
மழையை ஏன் வைகிறாய்

ஆஹ ஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

1970
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments