என் கண்மணி உன் காதலி

by Geethalakshmi 2010-01-03 18:14:55


என் கண்மணி உன் காதலி

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...



இருமான்கள் பேசும் பொது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஓரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில் அருகாமையில்
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல வில்லையோ ?

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...

Tagged in:

2208
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments