படம் (Movie) : டிஷூம்
பாடல் (Song) : பூமிக்கு வெளிச்சமெல்லாம்
Music Director : விஜய் அந்தோணி
பாடியவர் Singer: காயத்ரி, ராகுல் நம்பியார்
கவிஞர் : வைரமுத்து
"நான் சொல்வதெல்லாம் உண்மை ...
உண்மையை தவிர வேறெதுவும் இல்லை ..."
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்
லின்குலேக்கு லிங்கு லே லே லின்குலேக்கு லிங்கு லே லே

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் என்னை நீ அடித்தாய்
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்
நீ இதமாய் இதயம் கடித்தாய் (கடித்தாய் )
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய் (குளித்தாய் )
நீ மதுவாய் என்னையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
களம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளு சிறகே
வானம் ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டினிற்கும் வானமொன்றும் தூரமில்லை
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
ஆஆ ... .ஆஅ ... .ஆஹ்ஹ்ஹ ...
நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீபிடித்து எரியும் ..ஹேய் !
நீ துளியாய் எனக்குள் விழுந்தாள்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தாள் (சிரித்தாள் )
என் உள்ளம் வந்து மண்டி இட்டு தவழும் (தவழும் )
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி
மின்னலின் கண்மணி புரிகிறதே
தொட்டவுடன் உருகும்
ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகிறதே