படம் (Movie) : dishoom (டிஷூம்)
பாடல் (Song) : நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
Music Director : விஜய் அந்தோணி
பாடியவர் Singer: ஜெயதேவ் ,ராஜலக்ஷ்மி
கவிஞர் : வைரமுத்து
ஹேய் !
நெஞ்ஜான்கூட்டி l நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டரெம்பு போலே ஊர்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை ,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழித்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் , சிறு புல்லுக்கும் ,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொலவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே ?
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே
அது போல ...!!!
நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
(... .... )
சின்ன சின்ன செல்ல குறும்பும் , சீனி சிரிப்பும் ,
என்னை சீரழிக்குதே..
விறு விறுவென வளரும் பள்ளம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து , வலை உடைத்து ,
அதை சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காதுரிக்கே எதனாலே ?
பெப்ரவரி மாதத்துக்கு நாலு ஒன்னு கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும்
அது போல ...!!!
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்