சிகப்பு ரோஜாக்கள் - நினைவோ ஒரு பறவை பாடல்
by Sanju[ Edit ] 2010-01-03 19:51:08
படம்(Film) : சிகப்பு ரோஜாக்கள்
பாடல்(Song) : நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை - பா ப பாபா பாபா
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தான் உறவை
(நினைவோ ஒரு...)
ரோஜாக்களில் பன்னீர் துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்?
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்?
அதற்காக தான் அலைபாய்கிறேன்
வந்தேன் தர வந்தேன்
(நினைவோ ஒரு...)
பனி காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ?
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்
(நினைவோ ஒரு...)